ஜோகனஸ்பர்க் அணி தோல்வி: தென் ஆப்ரிக்க ‘டி–20’ போட்டியில் | ஜனவரி 15, 2023
கேப்டவுன்: தென் ஆப்ரிக்க ‘டி–20’ லீக் போட்டியில் ஏமாற்றிய ஜோகனஸ்பர்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கேப்டவுன் அணியிடம் வீழ்ந்தது.
தென் ஆப்ரிக்காவில், ஐ.பி.எல்., பாணியிலான ‘டி–20’ லீக் கிரிக்கெட் முதல் சீசன் நடக்கிறது. கேப்டவுனில் நடந்த லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (ஜோகனஸ்பர்க்), எம்.ஐ. கேப்டவுன் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கேப்டவுன் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
ஜோகனஸ்பர்க் அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ் (2), கேப்டன் டுபிளசி (8) ஏமாற்றினர். லியூஸ் டு பிளூய் (21), ஜானேமன் மலான் (16), ஜார்ஜ் கார்டன் (13*) ஆறுதல் தர ஜோனஸ்பர்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 105 ரன் எடுத்தது. கேப்டவுன் சார்பில் லிண்டே, ரபாடா, ரஷித் கான், ஒடியன் ஸ்மித் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய கேப்டவுன் அணிக்கு பிரேவிஸ் (42), ரியான் ரிக்கெல்டன் (21) நல்ல துவக்கம் தந்தனர். வான் டெர் துசென் (14*), சாம் கர்ரான் (15*) கைகொடுக்க கேப்டவுன் அணி 16.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி என, 9 புள்ளிகளுடன் கேப்டவுன் அணி முதலிடத்தில் உள்ளது. ஜோகனஸ்பர்க் அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி) 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
